திருவள்ளுர் கால்நடைத்துறையில் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல்
கால்நடைத்துறையில் காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் தகவல் :

 

திருவள்ளுர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியுள்ளோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஒரு ஊர்தி ஓட்டுநர் இனசுழற்சி முறை அல்லது பணியிடத்திற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் நாளது தேதிவரை புதுபிக்கப்பட்டிருக்க வேண்டும். ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் இரண்டு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

 

விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் வசிப்பதற்கான ஆதாரத்தின் நகலை இணைத்திட வேண்டும். இந்த காலிப்பணியிடம் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோரின் விகிதாசாரத்தை உள்ளடக்கியதாகும். 

 

இப்பதவிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது அருந்தததியினர் வகுப்பினர்களுக்கு 35. விண்ணப்பங்களை மாவட்ட இணையதளமான www.tiruvallur.tn.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எண்.179, ஜே.என். சாலையிலுள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு 26.03.2020 தேதி பிற்பகல் 5.45 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் மட்டுமே பணியிடம் நிரப்பப்படும். நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரர்கள் இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.